இயேசு முன்செல்கிறார் விடுதலை ஊழியத்தின் முக்கிய நோக்கம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பையும், அவருடைய வல்லமையையும் மக்களுக்கு அறிவித்து, அவருடைய நாமத்தின் மூலம் மக்களுக்கு விடுதலையையும், ஆறுதலையும், நம்பிக்கையையும் கொண்டுவருவதாகும்.
எங்கள் சபை ஊழியம், விடுதலை ஊழியம் மற்றும் YouTube, Instagram, Facebook போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலான மீடியா ஊழியம் ஆகியவற்றின் மூலம் இயேசு கிறிஸ்துவின் அன்பையும் நற்செய்தியையும் உலகெங்கிலும் உள்ள மக்களுக்குக் கொண்டுசெல்வதே எங்கள் விருப்பமாகும்.
குடிப்பழக்கம், போதைப் பழக்கம், மந்திரக் கட்டுகள், தீராத வியாதிகள், கடன் பிரச்சனைகள், பல்வேறு சரீர மற்றும் மன உபத்திரவங்கள், தீய பழக்கவழக்கங்கள் மற்றும் எந்தவிதமான அடிமைத்தனங்கள் அல்லது வாழ்க்கைப் போராட்டங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின்படி ஆலோசனைகள் வழங்கி, விசேஷித்த ஜெபங்களை ஏறெடுத்து, இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் விடுதலை, சுகம், மனமாற்றம் மற்றும் மறுவாழ்வைப் பெற்றுக்கொள்ள அவர்களுக்கு உதவுவதே எங்கள் ஊழியத்தின் முக்கிய நோக்கமாகும்.
இயேசு கிறிஸ்துவின் அன்பை அறிவித்து, அவருடைய நாமத்தில் விடுதலையைப் பெற்றுக்கொடுத்து, ஒவ்வொரு மனிதரையும் தேவனோடு நெருங்கிய உறவுக்குள் வழிநடத்துவதே எங்கள் ஊழியத்தின் இதயமும் நோக்கமும் ஆகும்.
The primary mission of Jesus Goes Ahead Deliverance Ministries is to proclaim the love and power of our Lord Jesus Christ and to bring freedom, comfort, hope, and transformation into people’s lives through His mighty name.
Through our Church Ministry, Deliverance Ministry, and Media Ministries, including YouTube, Instagram, Facebook, and other digital platforms, we are committed to sharing the love and Gospel of Jesus Christ with people across the world.
We seek to minister to those who are struggling with alcohol addiction, drug addiction, occult bondage, chronic illnesses, debt and financial difficulties, various physical and emotional struggles, harmful habits, different forms of bondage, and other life challenges. Through the guidance of the Holy Spirit, we provide spiritual counselling, offer special prayers, and help people experience deliverance, healing, restoration, and transformation in the mighty name of Jesus Christ.
Our heart and mission are to proclaim the love of Jesus Christ, bring freedom through His mighty name, and lead every individual into a closer relationship with God.
இயேசு முன்செல்கிறார் விடுதலை ஊழியங்கள் டிசம்பர் 2016-ஆம் ஆண்டு ரெவ. ஜே. சுந்தர் சிங் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. அரசு மருத்துவத் துறையில் பணியாற்றி வந்த பாஸ்டர் சுந்தர் சிங் அவர்கள், ஆண்டவரின் ஊழிய அழைப்பைப் பெற்று, தனது அரசு பணியிலிருந்து விலகி, ஊழியத்திற்குத் தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். இதன் தொடர்ச்சியாக இந்த அறக்கட்டளையை நிறுவி, தேவனுடைய சித்தத்தின்படி ஊழியப் பணிகளை முன்னெடுத்து வருகிறார். அவருடைய மனைவி சிஸ்டர் லில்லி சுந்தர் சிங் அவர்களும் அரசு மருத்துவத் துறையில் பணியாற்றியவர்.
Jesus Goes Ahead Deliverance Ministries was founded in December 2016 by Rev. J. Sundar Singh, with a heartfelt commitment to serve the Lord Jesus Christ and fulfil His divine calling. While serving in the Government Medical Department, Pastor Sundar Singh received a calling from the Lord, left his government service and devoted himself wholeheartedly to God’s ministry. He then established the Jesus Goes Ahead Deliverance Ministries Trust to carry the work forward in accordance with God’s will. His wife, Sister Lilly Sundar Singh, also served in the Government Medical Department.
தலைமை போதகர்கள்Head Pastors
உதவி போதகர்கள்Assistant Pastors
நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்திலும், பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலின்படியும், தேவனுடைய அன்பை மக்களிடம் பகிர்ந்து, தேவைப்படுவோருக்கு ஆவிக்குரிய வழிகாட்டுதலையும் நடைமுறை உதவிகளையும் வழங்க இரண்டு தனித்துவமான ஊழிய அமைப்புகள் செயல்படுகின்றன.
Under the guidance of the Holy Spirit and in the name of our Lord Jesus Christ, the Trust operates two dedicated ministries to share the love of God, provide spiritual guidance, and support individuals and families in need.
தனிப்பட்ட ஆலோசனை, விசேஷித்த ஜெபம், ஆவிக்குரிய வழிகாட்டுதல் மற்றும் அன்பான ஆதரவு மூலம் விடுதலை, மனமாற்றம் மற்றும் மறுவாழ்வை நோக்கி முன்னேற உதவுகிறோம்.
Through personal counselling, special prayers, spiritual guidance and compassionate support, we help people move towards freedom, healing and restoration through the love and grace of Jesus Christ.
ஆதரவற்ற, உதவியற்ற மற்றும் குறிப்பாகக் கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கு, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், தொழிற்பயிற்சிகள், சுயதொழில் வழிகாட்டுதல் மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்குகிறோம். அவர்கள் தன்னம்பிக்கையுடன், பொருளாதார ரீதியாகச் சுயசார்புடன், கண்ணியமான எதிர்காலத்தை உருவாக்க உதவுவதே எங்கள் நோக்கம்.
We support destitute, helpless and abandoned women, particularly those deserted by their husbands, through skill development training, vocational guidance, and support for self-employment and livelihood. Our goal is to help them become self-reliant, regain confidence and build a secure, dignified future.
ஆலோசனைகள், விசேஷித்த ஜெபங்கள், ஆவிக்குரிய வழிகாட்டுதல், தொழிற்பயிற்சிகள் மற்றும் நடைமுறை உதவிகள் மூலம் துன்பப்படுவோருக்கு ஆறுதலையும், ஆதரவற்றோருக்கு ஆதரவையும், முன்னேற விரும்புவோருக்குப் புதிய வாய்ப்புகளையும் வழங்குவது எங்களின் அர்ப்பணிப்பாகும்.
Through counselling, special prayers, spiritual guidance, vocational training and practical assistance, we bring hope to the hurting, support to the vulnerable, and opportunities for a better life to those in need.
பரிசுத்த ஆவியானவர் உங்கள் இருதயத்தில் ஏவுதலைத் தந்தால், எங்கள் ஊழியத்தின் மூலம் ஆண்டவருடைய நாமம் மகிமைப்படவும், அவருடைய பணி தொடர்ந்து நடைபெறவும், உங்கள் காணிக்கைகளையும் நிதி உதவிகளையும் மனப்பூர்வமாக வழங்கலாம். உங்கள் அன்பு, ஜெபம் மற்றும் ஆதரவிற்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்!
If the Holy Spirit leads you in your heart, you may prayerfully support our ministry through your offerings and financial contributions. Your generous support will help us continue the work of the Lord and glorify His name. Thank you for your love, prayers, and support!
| Name | SUNDARSINGH J |
| A/C No | 30854322922 |
| Bank | STATE BANK OF INDIA |
| IFSC | SBIN0000928 |
| Branch | TENKASI |
| GPay · PhonePe · Paytm | 8248015020 |
| பணப் பரிமாற்றம்Money Transfer | Western Union · Name: J. Sundar Singh |
| திங்கள் – வியாழன்Mon – Thu11 am – 12 pm | கட்டுகளை உடைக்கும் முழங்கால் அந்நிய பாஷை ஜெபம்Chain-breaking kneeling prayer in tongues (1 hr) |
| வெள்ளிFriday11 am | பெண்கள் கூடுகைSis. Lilly Sundar Singh · Women’s Meeting |
| சனி காலைSaturday AM11 am | யுத்த ஜெப வீரனை உருவாக்கும் வேத பாடம்Rev. Sundar Singh · Bible study to raise prayer warriors |
| சனி மாலைSaturday PM6:30 pm | விசேஷித்த அபிஷேக ஆராதனைSpecial Anointing Service |
| ஞாயிறுSunday8:45 am | ஞாயிறு ஆராதனைSunday Service |
📌 குறிப்பு:Note: திங்கள் முதல் சனி வரை காலை 10 மணி – மாலை 4 மணி ஆலோசனை மற்றும் விசேஷித்த ஜெபம் ஏறெடுக்கப்படும்.Monday to Saturday, 10 am – 4 pm: counselling and special prayer.
உங்கள் ஜெப விண்ணப்பங்களை 7904775901 என்ற எண்ணிற்கு Phone call / WhatsApp Text / WhatsApp Voice Message மூலமாகத் தெரியப்படுத்தலாம். ஊழியத்தின் நிமித்தம் நீங்கள் பெற்ற நன்மைகளை எங்களுக்கும் பிறருக்கும் பயன்பட, ஆண்டவருடைய நாமம் மகிமைப்பட, சாட்சியாகப் பகிரலாம்.
Send your prayer requests to 7904775901 by phone call, WhatsApp text or WhatsApp voice message. Share the blessings you received through this ministry as a testimony, for the glory of the Lord’s name.
சாட்சி புகைப்படங்களையும் WhatsApp மூலம் அனுப்பலாம்.Testimony photos can also be sent on WhatsApp.
✉️ Jesusgoesaheaddeliveranceministries@gmail.com
📍 வரைபடத்தில் பார்க்க (தென்காசி)View location on Google Maps (Tenkasi)